shadow

ஐபிஎல் 2018: டெல்லி, ஐதராபாத் அணிகள் வெற்றி

நேற்று நடைபெற்ற இரண்டு ஐபிஎல் போட்டிகளில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் வெற்றி பெற்றன,

முதல் ஆட்டத்தில் டெல்லி அணி மும்பையுடன் மோதியது. மும்பை அணி 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.

ஆனால் வெற்றிக்கு தேவையான 195 ரன்களை டெல்லி அணி சரியாக 20வது ஓவரின் கடைசி பந்தில் அடித்து த்ரில் வெற்றி பெற்றது

அதேபோல் இரண்டாவதாக நடந்த போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 138 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஐதராபாத் அணி 19 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டிகளுக்கு பின் ஐதராபாத் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மும்பை அணி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

Leave a Reply