deepikaபிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். ஆனால் மாப்பிள்ளை யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நடிகர் ரன்வீர்சிங் தான் தீபிகாவின் வருங்கால கணவர் என்ற செய்தி பாலிவுட்டில் உலவி வருகிறது. இதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

சமீபத்தில் நடிகர் ரன்வீர்சிங் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்ட தீபிகா, இரவு இரண்டு மணி வரை இருந்ததாகவும், பார்ட்டியை முடித்துவிட்டு செல்லும் வரை அவர் ரன்வீருடன் நெருக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பார்ட்டியில் ரன்வீர்சிங்-தீபிகா படுகோனே தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் இந்த பார்ட்டி தீபிகாவுக்காக ரன்வீர் கொடுத்த சிறப்பு பார்ட்டி என்றும் கூறப்படுகிறது.

இரவு 2 மணிக்கு இருவரும் பார்ட்டியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோதும் இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும், அதை பலரும் புகைப்படம் எடுத்து இருவரின் புகைப்படங்களையும் இணையத்தில் பலர் பகிர்ந்து ரன்வீருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தீபிகா படுகோனே தற்போது இரண்டு இந்தி படங்களில் நடித்து வருகிறார். ரஜினி-ரஞ்சித் இணையும் படத்திலும் இவர்தான் நாயகி என்று கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *