shadow

‘எந்திரன் 2’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாகிறார் தீபிகா படுகோனே

enthiran2சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ள நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள எந்திரன் 2′ படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனேவுடன் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

‘எந்திரன் 2’ படத்தின் நாயகியாக நடிக்க தீபிகா படுகோனே, காத்ரீனா கைப் மற்றும் கரீனா கபூர் ஆகியோர்கள் பரிசீலைனையில் இருந்த நிலையில் தற்போது ஷங்கர் முதல்கட்டமாக தீபிகா படுகோனேவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த படத்தில் நடிக்க தீபிகா சம்மதம் தெரிவித்துவிட்டதால், அடுத்த கட்டமாக சம்பளம், எத்தனை நாட்கள் கால்ஷீட் என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஹீரோயின் முடிவானதும், அடுத்து இந்த படத்தின் வில்லன் நடிகரை ஷங்கர் தேர்வு செய்வார் என்றும் அனேகமாக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் இந்த படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply