deepika leadஐரோப்பா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் மிகவும் புகழ் பெற்றது சாம்பியன் லீக் கால்பந்து போட்டி. இந்த போட்டியை காண உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோர்கள் இந்த போட்டியை பார்ப்பவர்களில் முக்கியமானவர்கள் தற்போது சாம்பியன் லீக் கால்பந்து போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் மற்றும் அட்லெட்டிகோ மாட்ரிட்  அணிகள் மோத உள்ளன. ஸ்பெயின் நாட்டின் லிஸ்பன் நகரில் வரும் 24ஆம் தேதி இந்த போட்டி நடைபெறுகிறது. இறுதிப்போட்டிக்கு உலகெங்கிலும் இருந்து பல முக்கிய வி.ஐ.பிக்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகை தீபிகா படுகொனே கலந்து கொள்கிறார்.  இது குறித்து தீபிகா கூறுகையில், சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.  ஐரோப்பிய நாடுகளின் இரு சிறந்த அணிகள் பங்கு பெற உள்ள கடும் போட்டி நிலவும் ஆட்டத்தை காண நான் ஆவலாக உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

final

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *