shadow

Naraka Samhara(Drawn in GIMP)திருமாலின் வராக அவதாரத்தின் போது உண்டான அரக்கன் பூதேவியின் மகனான நரகாசுரன். மக்களுக்கு எண்ணற்ற தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.தனது தாயைத் தவிர வேறு யார் கையாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்றவன்.நரகாசுரனை ஒழிக்க கிருஷ்ணரே நேரடியாக களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் பற்றி அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி பூதேவியின் மறுஉருவமான சத்யபாமாவை அழைத்துச் சென்றார்.

நரகாசுரன் கிருஷ்ணர் மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். உடன் சத்யபாமா வில்லை எந்தினாள். சத்யபாமாவின் அம்புக்கு பலியாகி விழுந்தான் நரகாசுரன்.

அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். எல்லா மக்களும் இந்த நாளை திருநாளாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.தீபாவளி உருவானது

ஒருவர் இறந்து போனால் எண்ணெய் வைத்து குளிப்பது வழக்கம். தீபாவளி அன்றும் அதிகாலை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அப்போது எந்த நீரில் குளித்தாலும் அது கங்கைக்குரிய அந்தஸ்தை பெறுவதால் கங்கா ஸ்தானம் என்கிறோம்.

அவன் மகன் பகதத்தன் தான் முதல் முதலில் தீபாவளி கொண்டாடினான், ராவணனை வென்று சீதையை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாள் ஆகவும் தீபாவளி அமைகிறது.

 

Leave a Reply