தீபாவளி சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு

train 1இம்மாதம் 29ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை அடுத்து வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லவிருப்பதால் சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் வசதி செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி சிறப்பு ரயில்கள் குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:.

திருச்சி – சென்னை ரயில்கள்:
29ம் தேதி – திருச்சியில் இருந்து சென்னைக்கு 29-ம் தேதி சிறப்பு ரயில் (06026) இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து 29-ம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

31-ம் தேதி – எழும்பூரில் இருந்து திருச்சிக்கு 31-ம் தேதி சிறப்பு ரயில் (06025) காலை 9 மணியளவில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 2.30-க்கு திருச்சியை அடையும்.
இந்த ரயில் அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை – திருநெல்வேலி:
29-ம் தேதி – எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு 29-ம் தேதி சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06041) இரவு 10.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடையும்.
30-ம் தேதி – திருநெல்வேலியில் இருந்து எழும்பூருக்கு சுவிதா சிறப்பு ரயில் (82610) மாலை 6.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

இந்த ரயில் விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ரயில் நிலையங்கள் வழியாக செல்லும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *