தீபிகா படுகோனே குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வோர்லி என்ற பகுதியில் 33 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. குடியிருப்பின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை வீரர்கள் 10 வாகனங்கள், சிறப்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.

அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் பிடித்துள்ள தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகிறது. குடியிருப்பு கட்டடத்தில் இருந்து 90 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர், தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 26வது மாடியில் தான் இந்தி நடிகை தீபிகா படுகோனே குடியிருக்கிறார். தீ விபத்து ஏற்பட்டதும் ரசிகர்கள் பலர் தீபிகாவிற்கு என்ன ஆனது என்று பதற்றம் அடைந்தனர். இந்நிலையில் தீபிகா படுகோனே தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் பாதுகாப்பாக உள்ளேன். உங்கள் அனைவருக்கும் நன்றி, தங்களுடைய உயிரை பணயம் வைத்து போராடிவரும் தீயணைப்பு படை வீரர்களுக்காக பிரார்த்திப்போம்’ என பதிவு செய்துள்ளார்.

https://twitter.com/deepikapadukone/status/1006859838440267776

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *