shadow

11 (1)

 தேனோடு நெல்லிக்காயை ஊறவைத்துச்  சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை நீங்கும்.
  தினமும் மதிய உணவில் அரைக்கீரையைச் சேர்த்து வந்தால் இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.
  பேயன் வாழைப்பழத்தோடு தேன் கலந்து
 சாப்பிட்டு வந்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
  சிறிய வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி உண்டு வந்தால் நன்கு தூக்கம் வரும்.
  பூசணிக்காயைப் பருப்போடு சேர்த்து  அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால்  நன்றாகத் தூக்கம் வரும்.
  பச்சை வெங்காயத்தை உண்டு வந்தாலும் நன்றாகத் தூக்கம் வரும்.
  கசகசாவை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தாலும் தூக்கம் வரும்.
  தினமும் இரவு தூங்குவதற்கு முன் இரண்டு வாழைப்பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் சூடு தணிந்து நன்றாகத் தூக்கம் வரும்.

Leave a Reply