shadow

debit and credit

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்வோருக்கு வரிச் சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெட்ரோல் பங்குகளிலும், ரயில் டிக்கெட்டுகள் வாங்குவதற்கும் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோரிடம் வசூலிக்கப்படும் பரிவர்த்தனை கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுபோல், வாடிக்கையாளர்களிடம் கார்டு பரிவர்த்தனையை அதிகமாக மேற்கொள்ளும் கடைக்காரர்களுக்கும் ஊக்கத் தொகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 சதவீதம் கார்டு பரிவர்த்தனையை ஒப்புக்கொண்டால் அந்த கடைக்காரர்களுக்கு 1 முதல் 2 சதவீதம் வரை வாட் வரி விலக்கு அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், வாடிக்கையாளர்களுக்கு வருமான வரி சலுகையும் வழங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. 1 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளை கார்டு மூலம் மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட உள்ளது. இவ்வாறு கார்டு பரிவர்த்தனையை மேற்கொள்ளும்போது அனைத்தும் பதிவாகி விடுகிறது. இதன்மூலம் வரி ஏய்ப்பை தடுக்கவும்,  கள்ளநோட்டு புழக்கத்தை ஒழிக்கவும் முடியும் என அரசு நம்புகிறது. இதுகுறித்த கருத்துக்கள் ஜூன் 29ம் தேதி வரை வரவேற்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.                                                                                                                             

Leave a Reply