shadow

shankarமேற்குவங்க மாநிலத்தில் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் திடிரென மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளானது. இந்த  மோசடி வழக்கில் பெரிய புள்ளிகளின் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்ப்பாக சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்ட அசாம் மாநில முன்னாள் டி.ஜி.பி. சங்கர் பருவா நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

சாரதா சிட்பண்ட் தொடர்பாக பல முக்கிய புள்ளிகள் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அசாம் மாநில முன்னாள் டி.ஜி.பி. சங்கர் பருவா வீட்டில் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக அவரிடம் பலமணி நேரம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்நிலையில், நேற்று (17ஆம் தேதி) முன்னாள் டி.ஜி.பி. சங்கர் பருவா திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் சிபிஐ விசாரணை குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த வழக்கில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என சிபிஐ தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இந்த வழக்கு சம்பந்தமாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் விசாரணை நடத்தப்படும் என ஏற்கனவே சிபிஐ தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply