shadow

dayalu

2ஜி ஊழல் வழக்கில் மே 26ஆம் தேதி தயாளு அம்மாள், ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார், கருணாநிதியின் அக்காள் மகன் பி.அமிர்தம் உள்ளிட்ட 19 பேர்களும் டெல்லியில் உள்ள  சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஒ,.பி.ஷைனி உத்தரவு இட்டிருப்பதால் திமுக வட்டாரம் பெரும் பதட்டத்தில் உள்ளது. அதிலும் திமுக தலைவர் கருணாநிதி கடும் அதிர்ச்சியில் உள்ளார்.

மேலும் 26ஆம் தேதி விசாரணைக்கு என்று வரச்சொல்லி கைது செய்துவிடுவார்களோ என கருணாநிதி அச்சம் கொண்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. தயாளு அம்மாவின் உடல்நிலை கைது செய்தால் மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளிவிடும் என்பதுதான் அவரது அச்சத்திற்கு காரணம். அவரது உடல் இருக்கும் நிலையை பார்த்தால் அவரால் ஒருநாள் கூட ஜெயிலில் தாக்குப்பிடிக்க முடியாது என்பதுதான் உண்மை நிலவரமாம்.

எனவே சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க மனு ஒன்று போட திமுக வழக்கறிஞர்கள் தயாராகிவருகின்றனர். அவருக்கு அல்சைமர் என்ற மறதி நோய் இருப்பதாகவும், அதனால் அவருக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் சுத்தமாக இல்லை என்றும், அவரால் தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாது என்கிற ரீதியில் மனு தயாராகிறது.

ஆனால் தயாளு அம்மாளுக்கு உண்மையில் ‘அல்சைமர்’ நோய் இருக்கிறதா என்பதைப் பற்றிய தகவல்களை சி.பி.ஐ. திரட்ட ஆரம்பித்துள்ளது. அவர்கள் கையில் வசமாக சிக்கியுள்ள ஓர் ஆதாரம், கடந்த ஏப்ரல் 24-ம் தேதி தயாளு அம்மாள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்ததுதான்!  ‘அல்சைமர்’ நோய் பாதிக்கப்பட்டவர் இப்படி வந்து வாக்களிக்க முடியுமா என்று கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.

இதனால் திமுகவின் மனு தள்ளுபடி செய்யப்படும் என்றும், தயாளூ அம்மாள் உள்பட 19பேர்களும் டெல்லியில் ஆஜராகியே தீரவேண்டிய நிலை வரலாம் என்றும் கூறப்படுகிறது. மே 16ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து, மே 26ஆம் தேதிக்குள் புதிய ஆட்சி வந்துவிடும் என்பதால் திமுகவின் பதற்றம் அதிகரித்துள்ளது.

Leave a Reply