shadow

ஏழைகளின் கல்வி மையமாக மாறுகிறது தாவூத் இப்ராஹிமின் சொகுசு ஓட்டல்
dawood
இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான மும்பை ஓட்டல் ஒன்றை 4 கோடி ரூபாய் கொடுத்து தொண்டு நிறுவனம் நடத்தும் ஒருவர் ஏலம் எடுத்துள்ளார். இந்த ஓட்டல் ஏழைகளின் கல்வி மையமாக விரைவில் மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.

தெற்கு மும்பையில் உள்ள பெண்டிபஜார் என்ற இடத்தில் ‘ரவுனாக் அஃப்ரோஷ்’ என்ற பெயரில் இயங்கி வந்த தாவூத் இப்ராஹிக்கு சொந்தமான ரெஸ்ட்ரான்ட் ஒன்று நேற்று ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் பலர் கலந்துகொண்ட நிலையில்,  ஏழைக்குழந்தைகளுக்காக தொண்டு நிறுவனம் நடத்தி வரும் பாலகிருஷ்ணன் என்பவர் 4.28 கோடி ரூபாய்க்கு ஏலம் இந்த ஓட்டலை எடுத்துள்ளார்.

இந்த ஓட்டலில் ஏழைகளுக்காக கல்வி மையம் ஒன்றை ஏற்படுத்த இருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த இடத்தை வர்த்தக பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்தப்போவதில்லை என்றும் இதே பகுதியில் உள்ள ஏழை எளிய பெண்கள் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக கம்ப்யூட்டர் மையம் ஒன்றை திறக்க உள்ளதாகவும் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1993ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம், குண்டு வெடிப்பை அடுத்து தனது கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை மும்பையிலேயே விட்டு விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

English Summary: Dawood’s Bhendi Bazaar hotel auctioned for Rs 4.28 core

Leave a Reply