shadow

Dawoodகடந்த 1993ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சரணடைய விரும்பியும், சி.பி.ஐ. அதை ஏற்கவில்லை என்று முன்னாள் காவல் அதிகாரி ஒருவர் தற்போது கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனர் இருந்த நீராஜ் குமார், மும்பை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில், முக்கிய அதிகாரியாக இருந்தவர். ஓய்வுக்கு பின்னர் இவர் தனது காவல்துறை அனுபவங்கள் குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் தான் சந்தித்த நிழலுலக தாதாக்கள் 10 பேர்கள்  குறித்தும் எழுதி உள்ளார். அவர்களிடம் செய்த விசாரணைகள், உரையாடல்கள், அவர்களை பிடிக்க நீராஜ் குமார் செய்த முயற்சிகள் யாவும் இந்த புத்தகத்தில் அடங்கியுள்ளது.

இந்நிலையில் மும்பை குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணகர்த்தாவான தாவூத் இப்ராஹிம் சிபிஐ போலீசாரிடம் சரணடைய தயார் என தெரிவித்ததாகவும், ஆனால் ஒருசில காரணங்களுக்காக சிபிஐ இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 அவர் தன்னுடைய புத்தகத்தில் கூறியிருப்பதாவது “பதற்றத்துடன்  இருந்த  தாவூத்துடன்  1994 ஜூன் மாதம் 3 முறை நான் பேசி உள்ளேன். அவன் சரணடையும் எண்ணத்துடன் இருந்தான் ஆனால் அவனிடம் ஒரு கவலை இருந்தது. அவன் இந்தியா திரும்பும் போது அவனை அவனது எதிர் கும்பல தீர்த்துக்கட்ட திட்டமிட்டு இருந்தது.  அவனை பாதுகாக்கும் பொறுப்பை சிபிஐ ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறியதாகவும், ஆனால் தன்னுடைய  மூத்த அதிகாரிகள் தாவூத் இப்ராஹிமிடம் தொடர்பு கொண்டு பேசுவதை நிறுத்திக் கொள்ளுமாறு தன்னிடம் கூறியதாகவும் எழுதியுள்ளார். இருப்பினும் தாவூத் தொடர்ந்து தன்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்ததாகவும் ஆனால் தன்னிடம் அதிகாரம் இல்லை என்பதால் அவனுடன் எடுத்து கூறியதை அடுத்து தன்னுடன் பேசுவதை அவன் நிறுத்திக் கொண்டதாகவும் அவர் கூறி  உள்ளார்.

Leave a Reply