டேவிட் ஹெட்லியின் வீடியோ கான்ப்ரன்ஸ் வாக்குமூலத்தில் உள்ள முக்கிய தகவல்கள்
david hadly1
கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் தொடர்வெடிகுண்டு சம்பவத்திற்கு முக்கிய காரணகர்த்தாவான டேவிட் ஹெட்லி இன்று வீடியோ கான்ப்ரஸ் முலம் வாக்குமூலம் அளிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியானது. இந்நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மும்பை தாக்குதல் வழக்கில் அப்ரூவராக மாறிய ஹெட்லி கொடுத்த வாக்குமூலத்தின் முக்கியா தகவல்களை இப்போது பார்ப்போம்.

1.லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சையது உந்துதலின் பேரிலேயே நான் அந்த இயக்கத்தில் இணைந்தேன்.

2. நான் 2002-ல் லஷ்கர் இயக்கத்தில் இணைந்தேன். பாகிஸ்தானின் முசாபர்பாத்தில் பயிற்சி மேற்கொண்டேன்.

3.லஷ்கர் இயக்கத்தைச் சேர்ந்த சாஜித் மிர் எனக்கு அறிமுகமானார். மும்பை தாக்குதல் தொடர்பாக அவருடன் தொடர்பில் இருந்தேன். (சாஜித் மிர்ரும் மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளி)

4.சாஜித் மிர், மேற்கத்திய நாடுகளில் இருந்து புதிதாக லஷ்கர் இயக்கத்தில் இணைபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பில் இருந்தார்.

5.அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்குள் நுழைய பெயரை மாற்றிக் கொண்டேன். 2006-ம் ஆண்டு தாவூத் கிலானி என்ற பெயரை டேவிட் ஹெட்லி என மாற்றிக் கொண்டேன்.

6.2008 நவம்பர் 26 சம்பவத்துக்கு முன்னர் 2 முறை மும்பையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் திட்டமிடப்பட்ட தாக்குதல் முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதே 10 தீவிரவாதிகள் தான் தாக்குதலுக்கு முயன்றனர்.

7.மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு முன்னதாக 8 முறை இந்தியா வந்து சென்றேன். 7 முறை பாகிஸ்தானிலிருந்து நேரடியாக மும்பை வந்தேன்.

8.இந்தியாவிடம் விசா கேட்டு விண்ணப்பித்த போது அளித்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை.

9.பாகிஸ்தானின் லாண்டி கோடல் பகுதியில் நான் கைது செய்யப்பட்டேன். வெளிநாட்டினருக்கு அப்பகுதியில் அனுமதி இல்லை என்பதால் நான் கைதானேன்.

10. ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பினர் என்னிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்தியாவில் ரகசிய வேவு பார்ப்பதற்கு என்னை பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டனர்.

இவ்வாறாக பல தகவல்களை ஹெட்லி தெரிவித்துள்ளார். இன்னும் வாக்குமூலம் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் இதையடுத்து இன்னும் பல தகவல்கள் அந்த வாக்குமூலத்தில் இருந்து தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *