shadow

darlingயாமிருக்க பயமே, பிசாசு ஆகிய படங்களின் வெற்றிக்கு பின்னர் வெளிவந்திருக்கும் பேய்ப்படம் டார்லிங். ஜி.வி.பிரகாஷ், சாம் ஆண்டன் ஆகியோர்களின் அறிமுகப்படமாக வெளிவந்துள்ள இந்த படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘பிரேம கதா சித்திரம்’ என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்டஹ்க்கது.

 தற்கொலை செய்துகொள்வதற்காக கடலோரப் பண்ணை வீட்டுக்கு நான்கு நண்பர்கள், அந்த வீட்டில் பேய் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகின்றனர். காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் நாயகன் ஜி.வி.பிரகாஷ், அவனைக் காப்பாற்றும் காதலியாக நிக்கி கல்ராணி, ஜி.வி.யின் தற்கொலைக்கு கம்பெனி கொடுக்க வரும் நண்பர்களாக பாலசரவணன், கருணாஸ் என நான்கு பேரும் பண்ணை வீட்டில் இருக்கிறார்கள். அவர்களின் தற்கொலை திட்டம் வெற்றி பெற்றதா? அந்த வீட்டில் இருந்த பேய் அவர்களை என்ன செய்தது? ஜி.வி.பிரகாஷ்- நிகில் கல்ராணியின் காதல் என்ன ஆயிற்று என்பதுதான் ‘டார்லிங்’.

முதல் படத்தை நகைச்சுவை மற்றும் த்ரில்லர் பாணியை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ள இயக்குநர் சாம் ஆண்டனிக்கு பாராட்டுக்கள். முதல் பாதியில் வரும் நீண்ட ஃப்ளாஷ்பேக்குகள், தேவையில்லாத இடத்தில் வரும் பாடல்கள் எனத் திரைக்கதை சில இடங்களில் மெதுவாக நகர்ந்தாலும், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வசனங்கள் சிரிக்க வைத்தாலும், காமெடி கலந்த த்ரில் திரைக்கதையினால் இயக்குனர் வெற்றி பெற்றுள்ளார்.

அறிமுக நடிகர்களாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும், நிக்கி கல்ராணியும் தங்கள் பங்கை சரியாகவே செய்திருக்கின்றனர். நகைச்சுவைக் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும், ஜி.வி. பிரகாஷ் ஓரளவுக்கு தேறினாலும் அவர் இன்னும் நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பாலசரவணன், கருணாஸ் கூட்டணி சிரிக்க வைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர்.

சிலநிமிடங்கள் மட்டும் படத்தில் வந்தாலும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், கலையரசன் என இருவரும் காட்சிகள் பிரமாதம். ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசையிலும், பாடல்களிலும் தேறிவிடுகிறார். கிருஷ்ணன் வசந்தின் கேமரா மற்றும் ரூபனின் படத்தொகுப்பு ஆகியவை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் டார்லிங்’ நகைச்சுவைக்காக ஒருமுறை பார்க்கலாம்.

Leave a Reply