shadow

‘தர்பார்’ ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறவுள்ளது

இந்த விழாவில் திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளவிருப்பதாகவும், உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ஜனவரி 9ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் உறுதி செய்த நிலையில் தற்போது இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டது. முதல்கட்டமாக இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை கல்பாகா பிலிம்ஸ் என்ற பிரபல நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு ‘தர்பார்’ படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து இன்னும் வியாபார தகவல்களும் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிகந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமான், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *