shadow

விஜய் 60′ படத்தில் இன்னொரு வில்லனாக டேனியல் பாலாஜி

Daniel-Balaji-1இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ள விஜய்யின் 60வது படத்தின் படப்பிடிப்பு வரும் 11ஆம் தேதி தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை பரதன் இயக்கவுள்ளார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் ‘லிங்கா’ வில்லன் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு வில்லன் தற்போது இணைந்துள்ளார்.

கவுதம் மேனன் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை உள்பட பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்த டேனியல் பாலாஜிதான் விஜய் 60′ படத்தில் புதியதாக இணைந்த வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடிக்கும் படத்தில் டேனியல் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தகக்து.

Leave a Reply