மேஷம்
புது முயற்சிகள் வெற்றியடையும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டரிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு

ரிஷபம்
இன்றைய தினம் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கணவன்- மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதரவகையில் நன்மை பிறக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

மிதுனம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்க்கப்பாருங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்

கடகம்
குழப்பத்திலிருந்த நீங்கள் இன்று திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் குறையும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்

சிம்மம்
இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். சகோதரவகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை

கன்னி
திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க் கைத் துணையின் ஆதவு கிட்டும். கையில் காசு பணம் புரளும். தலைச்சுற்றல், வயிற்றுவலி நீங்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்

துலாம்
மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொந்தம்-பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். முன்கோபம் விலகும். அரசுப்பணிகள் சுமுகமாக முடியும். வாகனச்செலவு விலகும். வேற்று மதத்தினரால் ஆதரவு கிட்டும். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு

விருச்சிகம்
வியாபாரத்தில் அதிரடி முடிவுகளை எடுத்து போட்டியாளர் களை அதிரச் செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சனைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரிலிருந்து நற்செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை மேலதிகாரி புரிந்து கொள்வார்கள். வாகனப்பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்

தனுசு
இன்றையதினம் பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்திலுள்ளவர்களிடம் மனம் விட்டுப்பேசுவீர்கள். தாயின் உடல் நிலை சீராக இருக்கும். சகோதர, சகோதரிகளால் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உதியோகத்தில் பணிகளை விறைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

மகரம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்

கும்பம்
இன்றையதினம் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே

மீனம்
தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். கடனை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை வாசூலிப்பீர்கள். அம்மாவின் உடல் நிலை சீராக அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்

Leave a Reply