மேஷம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சிகளை உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

ரிஷபம்
குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பழைய கடன் பிரச்சனையில் ஒன்று தீரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

மிதுனம்
எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புது வேலை அமையும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

கடகம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

சிம்மம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

கன்னி
நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் கடன் தர வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் அதிருப்தி அடைவார்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

துலாம்
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். அசதி, சோர்வு வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

விருச்சிகம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

தனுசு
எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

மகரம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். முகப்பொலிவுக் கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் நலம் சீராகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

கும்பம்
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். மற்றவர்கள் விவகாரத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

மீனம்
உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. மனைவிவழியில் நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

Leave a Reply