shadow

06-dahigosht

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத ஆட்டுக்கறி – 500 கிராம்

தயிர் – 500 கிராம்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)

வெங்காயம் – 2 (நறுக்கியது)

தக்காளி – 2 (நறுக்கியது)

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

மல்லி தூள் – 3 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – 2 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி – 2 டேபிள் ஸ்பூன்

பிரியாணி இலை – 1

மிளகு – 1 டீஸ்பூன் (பொடி செய்தது)

கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் மஞ்சள் தூள், மிளகுப் பொடி, உப்பு, தயிர், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்.பச்சை மிளகாய் போட்டு கலந்து, கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து கலந்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை போட்டு தாளித்து, வெங்காயம் மற்றும் மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு தக்காளி, மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் சீரகப் பொடி போட்டு கிளறி, எண்ணெயும் மசாலாவும் தனியாக பிரியும் வரை வதக்கவும். பின் ஊற வைத்துள்ள மட்டனை போட்டு, அதில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, மட்டன் வேகும் வரை நன்கு கொதிக்க விட்டு, சற்று கெட்டியான கிரேவி போல் வந்ததும், இறக்க வேண்டும். இப்போது சுவையான தஹி கோஸ்ட் ரெடி!!!

Leave a Reply