shadow

பிரிட்டிஷ் இளவரசர் திருமணத்தை கொண்டாடும் மும்பை டப்பாவாலாக்கள்

பிரிட்டன் இளவரசர் ஹாரியும் ஹாலிவுட் அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் வரும் 19-ம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நிலையில் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை மன்னர் குடும்பத்தினர் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். திருமணத்திற்கு முன்னரே உலகின் பல நாடுகளில் இந்த திருமண விழாவை ஹாரியின் ஆதரவாளர்களும், மேகன் மார்க்லேவின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியின் திருமணத்தை இனிப்பு கொடுத்து கொண்டாட மகாராஷ்டிராவில் உள்ள டப்பாவாலாக்கள் முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து மும்பை டப்பாவாலாக்கள் அசோசியேஷனின் செய்தி தொடர்பாளர் சுபாஷ் தலேகர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த பிரிட்டன் இளவரசர் சார்லஸ் திருமணத்துக்கு எங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பினர். அங்கு சென்ற எங்களுக்கு பிரிட்டன் ராஜ குடும்பத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அந்த வரவேற்பை கவுரவிக்கும் வகையில் இளவரசர் ஹாரியின் திருமணத்தன்று மும்பையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளான டாடா மெமோரியல் மருத்துவமனை, கே இ எம் மருத்துவமனை மற்றும் வாடியா மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply