அத்தியாவசிய பொருட்கள் காட்டில் மழை

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக அனில் அம்பானி, ரத்தன் டாடா உள்பட பல்வேறு தொழில் அதிபர்களின் நிறுவனங்கள் தத்தளித்து வருகின்றன. பல ஆயிரம் கோடி முன்னணி நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் டிமார்ட் என்ற நிறுவனம் மட்டும் கடந்த சில நாட்களாக அதிக லாபத்தை சம்பாதித்து வருகிறது. இதற்கு காரணம் இந்த நிறுவனம் மக்களின் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வது தான்

கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை அதிக அளவில் வாங்கி இருப்பு வைப்பதால் தான் இந்நிறுவனத்தின் லாபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

மக்களின் அத்தியாவசிய பொருட்களுக்கு என்றுமே டிமாண்ட் இருக்கும் என்பதை இந்த சம்பவம் நிகழ்த்தி உள்ளது என்பதும், ஆடம்பர பொருட்கள் விற்பனை ஒரு கட்டத்தில் அழிந்துவிடும் என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது

Leave a Reply