shadow

உலகம் முழுவதும் இன்று இணையதள தாக்குதல்: இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை

அணு ஆயுத தாக்குதல்களை விட பயங்கரமானது என்று வர்ணிக்கப்படும் இணையதள தாக்குதல் இன்று உலகம் முழுவதும் நடைபெற வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இணையதள வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ என்ற வைரஸ் மூலம் இணைய தாக்குதல் ஏற்கனவே நடத்தப்பட்டிருப்பதாகவும், இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா உள்பட சுமார் 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் இதுகுறித்த தீவிர விசாரணையை உலகம் முழுவதிலும் உள்ள சைபர் க்ரைம் அதிகாரிகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இங்கிலாந்து உள்துறை மந்திரி அம்பர் ரூத் குறிப்பிடுகையில், “இந்தப் பிரச்சினை பெருமளவு சரிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் கம்ப்யூட்டர் வைரசுக்கு எதிராக இன்னும் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.

Leave a Reply