shadow

cuckoo-malavika-to-quit-acting-700x413

 

குக்கூ படத்தில் பார்வையற்ற கேரக்டரில் மிகவும் பிரமாதமாக நடித்த நடிகை மாளவிகா, சினிமாவை விட்டு விலக திடீர் முடிவெடுத்துள்ளார்.

குக்கூ படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தாலும், தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை என்றும், தன்னுடைய ஆசை தான் ஒரு சிறந்த பைலட் ஆகவேண்டும் என்பதுதான் என்றும் கூறியுள்ளார்.

ஜெர்மனியில் உள்ள பைலட் பயிற்சி பள்ளியில் மிக விரைவில் சேர்ந்து படிக்க உள்ளதாகவும், சினிமாவில் தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை எனினும், ராஜு முருகன் இன்னொரு கதையை எனக்கு பொருத்தமாக இருப்பதாக கூறினால் அவருடைய படத்தில் மட்டும் கண்டிப்பாக நடிப்பதாக கூறியுள்ளார்.

குக்கூ படத்திற்கு பின்னர் தமிழில் ஒரு சுற்று வருவார் என எதிர்பார்க்கப்பட்ட மாளவிகா, திடிரென சினிமாவை விட்டு செல்ல இருப்பதால் கோலிவுட் தயாரிப்பாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்

Leave a Reply