Chennai Today News

Cuba get internet first time முதன் முறையாக இன்டர்நெட் வசதியை பெற்றுள்ள கியூபா

முதன் முறையாக இன்டர்நெட் வசதியை பெற்றுள்ள கியூபா

இந்தியா உள்பட பலநாடுகளில் குக்கிராமம் வரை இண்டர்நெட் வசதி கிடைத்து கொண்டிருக்கும் இந்த நவீன காலத்தில் முதல்முறையாக இண்டர்நெட் வசதியை தற்போதுதான் கியூபா நாடு பெற்றுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நல்ல மாற்றங்களை பெற்று வரும் கியூபா, இப்போது தான் முழு இணைய சேவை வசதியை பெற்றுள்ளது. ரஷ்யாவின் உதவியால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தாலும் இப்போது இந்நாடு அமெரிக்காவின் எதிரி நாடாக உள்ளது.

அமெரிக்காவின் கெடு பிடியால் கியூபா பல மாற்றங்களை சந்திக்காமல் இருந்த நிலையில் தற்போது இங்கு 2ஜி நெட் வொர்க் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் வீடியோக்கள் பார்க்க முடியாது என்றாலும் இண்டர்நெட் என்றால் என்ன என்பதை இந்நாட்டு மக்கள் அறிய தொடங்குவார்கள்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!