பயணிகள் விமானம் விபத்து: 100 பயணிகள் பரிதாப பலி

கியூபா நாட்டில் உள்ள ஹவானா என்றா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 105 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகள் உட்பட 114 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த விமான புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே இந்த விமான விபத்தில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தில் பயணம் செய்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *