ஐபிஎல் 2018: இன்று இறுதி போட்டி, சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் திருவிழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் இன்று சாம்பியன் பட்டத்தை வெல்ல மோதவுள்ளன. இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி என்ற பெருமை கிடைக்கும். ஏற்கனவே சென்னை அணி கடந்த 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு 2008, 2012, 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று தோல்வி அடைந்துள்ளது.

அதேபோல் கடந்த 2016ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ள ஐதராபாத் அணியும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சமபலத்துடன் இருக்கிறது. அந்த அணி சென்னைக்கு பதிலடி கொடுத்து 2-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

இரு அணிகளும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடுவார்கள் என்பதால் இன்றைய இறுதிப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *