பெண் குழந்தையை கொரியரில் பார்சல் அனுப்பிய கல்நெஞ்சு தாய்

தாயின் அன்புக்கு ஈடு இணை இல்லை என்று கூறப்படுவதுண்டு. ஆனால் அதே நேரத்தில் பெண் குழந்தைகளை கருவிலும், பிறந்த பின்னரும் கொலை செய்வதும், அனாதையாக குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிடுவதும் அதே தாய்தான். இந்த வழக்கம் இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலு உள்ளது என்பதை அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

சீனாவில் கொரியர் டெலிவரி செய்யும் நபர் ஒருவர் குழந்தைகள் காப்பகத்திற்கு வந்த ஒரு பார்சலை எடுத்து கொண்டு டெலிவரி செய்ய சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பார்சலின் உள்ளே இருந்து குழந்தை அழுகுரல் கேட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கொரியர் டெலிவரி நபர் பார்சலை பிரித்து பார்த்தபோது அதன் உள்ளே பச்சிளங்குழந்தை இருந்தது. இந்த விச்யம் கேள்விப்பட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குழந்தைக்கு தண்ணீரும் பாலும் கொடுத்தனர். தற்போது குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. குழந்தையை கொரியர் பார்சலில் அனுப்பிய கல்நெஞ்சம் கொண்ட தாயை போலிசார் தேடி வருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *