shadow

காய்ச்சல் பாதித்த பெண்ணை 7 கிமீ தூக்கி சென்று சிகிச்சை அளித்த ராணுவம்

நக்சல்கள் காரணமாக சத்தீஸ்கர் மாநிலம் பின்தங்கிய நிலையில் இருக்கையில் இம்மாநிலத்தின் சில பகுதிகளில் சுகாதார வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் மிகக் குறைந்த அளவிலே உள்ளன. இந்த நிலையில் அடர்ந்த காட்டு பகுதியில், வாகனங்களே செல்ல முடியாத பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தால் அவருக்கு உடனடியாக மருத்துவமனை சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்தது.

இந்த நிலையில் அந்த பெண்ணை ஒரு ஸ்ட்ரக்சரில் வைத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படையினர், 7கிமீ தோளில் சுமந்து மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இதுகுறித்த வீடியோ காட்சி ஒன்று ஃபேஸ்புக், டுவிட்டரில் மிக வேகமாக வைரல் ஆகிவருகிறது.

மத்திய படையினரின் இந்தச் செயலுக்கு ஒருபுறம் பாராட்டு குவிந்து வந்தாலும் அடிப்படை வசதிகள் கூட பொதுமக்களுக்கு செய்து தராத சத்தீஷகர் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டும் வருகிறது.

 

Leave a Reply