Chennai Today News

உலக கோப்பை கால்பந்து: ரஷ்யா அதிர்ச்சி தோல்வி

உலக கோப்பை கால்பந்து: ரஷ்யா அதிர்ச்சி தோல்வி

உலகக்கோப்பை கால்பந்து காலிறுதி போட்டியில் குரோஷியா அணிக்கு எதிரான போட்டியில் ரஷ்யா பெனால்டி ஷூட் முறையில் தோல்வி அடைந்து அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது

நேற்றைய போட்டியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினாலும் அதிர்ஷ்டம் குரோஷியா பக்கம் இருந்தது. ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ரஷியா வீரர் டெனிஸ் செரிஷேவ் ஒரு கோலும், ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரே கிரிமெரிக் ஒரு கோலும் அடித்ததால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் இருந்தனர்.

இதன்பின்னர் இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆனால் கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. எனவே மீண்டும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது.

இதனையடுத்து நடந்த பெனால்ட்டி ஷூட் முறையில் குரோஷியா 4 கோல்களும், ரஷ்யா 3 கோல்களும் போட்டதால் 4-3 என்ற கோல்கணக்கில் குரோஷியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!