Chennai Today News

ரஷ்ய அதிபர் புதினுக்கு குரேஷிய பெண் அதிபர் அளித்த பரிசு

ரஷ்ய அதிபர் புதினுக்கு குரேஷிய பெண் அதிபர் அளித்த பரிசு

ரஷ்யாவில் நேற்று உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியை நேரில் கண்டு ரசிக்க சென்றிருந்த குரேஷிய அதிபர், போட்டி தொடங்குவதற்கு முன் ரஷ்ய அதிபர் புதினுக்கு தனது நாட்டின் அணி வீரர்கள் அனியும் டீசர்ட் ஒன்றை பரிசாக வழங்கினார்.

நேற்று ரஷ்யாவில் பிரான்ஸ் அணிக்கும் குரேஷியா அணிக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதியாட்டம் நடந்தது. இந்த போட்டியில் பிரான்ஸ் 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.

இந்த நிலையில் தனது நாட்டின் அணி வீரர்களை உற்சாகப்படுத்தவும் குரோஷிய அதிபர் கொலிண்டா கிராபர் கிடாரோவிக் ரஷ்யா சென்றிருந்தார். இதையடுத்து இன்று ரஷிய அதிபர் மாளிகையில் அதிபர் புதினுடனான சந்திப்பின் போது, புதின் என அச்சிடப்பட்ட கால்பந்து வீரர்கள் அணியும் டிஷர்ட்டை குரோஷிய அதிபர் கொலிண்டா கிராபர் கிடாரோவிக் ரஷ்ய அதிபருக்கு நினைவு பரிசாக வழங்கினார். இந்த பரிசை புதின் மிக மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!