மொறுமொறுப்பான கோழி வறுவல் மற்றும் சீஸ்

 

crunchycheesechickentenders

நீங்கள் சீஸ் பிரியர் என்றால் இது உங்களுக்கு ஏற்ற‌ ஒரு அற்புதமான டிஷ்ஷாகும். இந்த டிஷ் செய்ய  கோழியின் நெஞ்சிலிருந்து எலும்பில்லா துண்டுகளை எடுக்க வேண்டும். இதை சாஸ் கொண்டு பரிமாறலாம். குறைந்த எண்ணிக்கை கலோரிகளை தருவதற்கு நீங்கள் மயோன்னீஸை குறைவாக பயன்படுத்த வேண்டும்.
தேவையான பொருட்கள்:
1. கோழியின் மார்பக துண்டுகள் எலும்பில்லாமல்
2. நறுக்கப்பட்ட பூண்டு
3. சீஸ்
4. கருப்பு மிளகு
5. உப்பு, எலுமிச்சை சாறு
6. கொத்தமல்லி இலைகள்
7. முட்டை
8. ரொட்டி கிரம்ப்ஸ்
9. தக்காளி கெட்ச்அப்
10. எண்ணெய்
11. மயோன்னைஸ்

செய்முறை:

  • முட்டை, தக்காளி சாறு, எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி இலைகள், தூளாக்கிய‌ மிளகு, உப்பு, பூண்டு மற்றும் கோழி இவை அனைத்தையும் நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
  • இதை சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு நீளமான குச்சியில் இரண்டு கோழி துண்டுகளுக்கு இடையில் ஒரு சீஸை குத்தி கொள்ளவும்.
  • இப்போது இதை ரொட்டி கிரம்ப்ஸில் இதை முழுவதும் ரோல் செய்து பிரட்டிக் கொள்ள‌ வேன்டும்.
  • ஊற வைத்துள்ள‌ எஞ்சியிருக்கும் கோழித்துண்டுகளை இதே மாதிரி இரண்டு கோட் பிரட்டி எடுத்து கொள்ளவும்.
  • எண்ணெயில் இந்த சீஸ் மற்றும் கோழி துண்டுகளை பொறித்து எடுத்துக் கொள்ள‌க வேண்டும்.
  • ஒரு கிண்ணத்தில் தக்காளி கெட்ச்அப் மற்றும் மயோன்னைஸ் கலந்து சாஸ் தயார் செய்ய வேண்டும்.
  • சாஸ் உடன் கோழி மற்றும் சீஸ் துண்டுகள் பரிமாறவும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *