shadow

கொரோனா எதிரொலி: குற்றங்கள் குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதி!

கொரோனா வைரஸ் காரணமாக பாலியல் குற்றங்கள் உள்பட அனைத்து குற்றங்களும் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக டெல்லியில் கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில் 3,416 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் இந்தாண்டு மார்ச் மாதம் 15ம் தேதி முதல்31 வரை 1,990 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாகவும் கிட்டத்தட்ட 50% டெல்லியில் மட்டுமே குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்

கடந்த சில நாட்களாக எந்த ஒரு ஊடகத்திலும் பாலியல் தொல்லை, கள்ளக்காதல், கொலை, கொள்ளை போன்ற செய்திகள் வரவில்லை என்பதே நாடு முழுவதும் குற்றங்கள் குறைந்துவிட்டதற்கான ஆதாரம் என்றும் கூறப்படுகிறது. குற்றங்கள் குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *