shadow

கிரிக்கெட் பேட்டில் விஜய்யின் சண்டைக்காட்சி. அனல் அரசு தரும் ஆச்சரிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘பைரவா’ படத்தில் மொத்தம் 5 சண்டைக்காட்சிகள் இருப்பதாகவும், அவற்றில் ஒரு சண்டைக்காட்சியில் கிரிக்கெட் பேட்டை வைத்து விஜய் மிக அருமையாக நடித்துள்ளதாகவும் ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு தெரிவித்துள்ளார்.

இந்த சண்டைக்காட்சி சண்டைக்காட்சி போல இருக்கக்கூடாது என்றும் கிரிக்கெட் விளையாட்டு போன்ற சண்டைக்காட்சியாக வேண்டும் என்று இயக்குனர் பரதன் கூறியதாகவும், அந்த கான்செப்டில் தனது உதவியாளர்களுடன் அமைத்த அந்த கிரிக்கெட் சண்டைக்காட்சி படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் அனல் அரசு கூறியுள்ளார்.

அதேபோல் கோயம்பேடு மார்க்கெட் சண்டைக்காட்சி தத்ரூபமாக இருந்ததாகவும், மொத்தத்தில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து சண்டைக்காட்சிகளும் ஆக்சன் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply