shadow

எதிர்க்கட்சி தலைவர் போட்டியிட தடை: ரஷ்யாவில் பரபரப்பு

ரஷியா நாட்டின் பிரதமராக முன்னர் பொறுப்பு வகித்த விளாடிமிர் புதின்(65) கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது ஆறாண்டு பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் 18-ம் தேதி அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்த தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின். அவரை ரஷியா எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (41) போட்டியிட முடிவு செய்து இருந்தார்.

அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டு அது முடிவடையாமல் நிலுவையில் உள்ளது. எனவே ரஷிய அரசியல் சட்டப்படி அவர் போட்டியிட ரஷியா தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இந்த தடையை எதிர்த்து அவர் ரஷியா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நவால்னி மீதான தடையை ரத்து செய்ய முடியாது என தீர்ப்பளித்து அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் நவால்னி போட்டியிட முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply