shadow

இன்று கர்நாடக தேர்தல் முடிவு: வெற்றி யாருக்கு?

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில், 11 மணிக்கெல்லாம் முன்னணி விபரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் (மஜத) ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நடைபெறும் நிலையில் வெற்றி யாருக்கு? ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிந்துவிடும்

ஜெயநகர் மற்றும் ராஜராஜேஷ்வரி நகர் ஆகிய 2 தொகுதிகளை தவிர் மீதமுள்ள 222 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. ஆட்சியை பிடிக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply