shadow

download (1)

இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் சித்த மருத்துவம் (பி.எஸ்.எம்.எஸ்.), ஆயுர்வேதம் (பி.ஏ.எம்.எஸ்.), யுனானி (பி.யு.எம்.எஸ்.), யோகா- இயற்கை மருத்துவம் (பி.என்.ஒய்.எஸ்.), ஹோமியோபதி (பி.எச்.எம்.எஸ்.) ஆகிய இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அக்டோபர் 25 முதல் 28 வரை நடைபெறவுள்ளது.

இதில், பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் தனித்தனியாக தபாலிலும், குறுந்தகவலிலும் அனுப்பப்பட்டுள்ளன.

கடிதம் கிடைக்கப் பெறாவதவர்கள் www.tnhealth.org என்ற சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்கான இணைப்பில் விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்தால், அழைப்புக் கடிதம் கிடைக்கும்.

கலந்தாய்வில் பங்கேற்பவர்கள்’Director of Indian Medicine and Homoeopathy, Chennai-106′ என்ற பெயருக்கு, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் ரூ.5,500-க்கான வரைவோலை, அசல் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும் என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply