shadow

jade-buddha-statue-atசீனாவில் உள்ள முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவருடைய மாபெரும் ஊழல் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் லஞ்சம் வாங்கிய பணத்தை புத்தர் சிலைக்கு அடியில் ஒளித்து வைத்துள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

சீன நாட்டில் மங்கோலியா என்ற பகுதியை சேர்ந்த 63 வயது அரசு அதிகாரி வு ஷிஷோங். இவர் அரசு அதிகாரியாக இருந்துகொண்டே அந்த பகுதியின் சீன கம்யூனிஸ்டு தலைவராகவும் இருக்கின்றார். இவர்  பீகிங் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்தவர். மேலும் இளவயது முதலே மாவட்ட அளவிலான கவர்னர் பதவியிலும் இருந்து வருகிறார்.

மிகக்குறைந்த அளவே சம்பளம் வாங்கும் இவர், தனது மனைவிக்கு விலை மதிப்பு மிக்க நகைகளை வாங்கிக்கொடுத்துள்ளார். அவற்றை அவரது மனைவி அணிந்து ஆடம்பர விடுதிகளுக்கு சென்று வந்தார். மேலும் இவர் தனது மனைவிய் பெயரில் 34 ஆடமபர பங்களாக்கள் சீனாவில் வாங்கி உள்ளாதாகவும், கனடாவில் இரண்டு பங்களா வாங்கியுள்ளதாகவும் தெரிகிறது. இவரது ஆடம்பரம் குறித்து சந்தேகம் அடைந்த பிற அரசு அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் இவரது வீடு திடீரென வருமானவரி அதிகாரிகளால் சோதனைக்கு உள்ளானது.

இவர் வீட்டில் உள்ள மிகப்பெரிய புத்தர் சிலையின் அடியில் ரகசிய அறை ஒன்று இருந்ததையும் அதில் இவர் ஊழலில் சேர்த்த பணம் நகைகள், தங்க கட்டிகள் சொத்து ஆவணங்களை பதுக்கி வைத்திருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் புத்தர் சிலையின் அடியில் நூற்றுக்கணக்கான ஆபாச சிடிக்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் வாங்கும் சம்பளத்தில் இவைகளை வாங்குவது என்றால் இவருடைய 300 வருட சம்பள பணம் தேவைப்படும்.

பின்னர் வருமான வரி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட வு ஷிஷோங் மற்றும் அவரது மனைவியிடம் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply