shadow

இல்லாத ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு. தென்னாப்பிரிக்காவின் வித்தியாசமான ஊழல்
sa
போடாத ரோடு, கட்டாத பாலம் ஆகியவற்றை கணக்கு காட்டி சம்பாதிப்பது என்பது நம்மூர் அரசியல்வாதிகளின் பாணி. இதேபோல் இல்லாத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியதாக தென்னாப்பிரிக்காவில் வித்தியாசமான ஊழல் ஒன்று நடந்திருப்பதை அந்நாட்டு அரசு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தென்னாப்பிரிக்கா நாட்டில் உள்ள மாகாணம் ஒன்றில் பணியில் இல்லாத ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கப்பட்டதாகக் கூறி லட்சக்கணக்கான டாலர்கள் அரசின் நிதி செலவழிக்கப்பட்டதை அந்நாட்டின் அரசு அதிகாரிகள் கண்டுபிடித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உண்மையில் பணியில் இல்லாத 30,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளங்கியதாகக் கூறி இந்த முறைகேடு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டின் வட மேற்கு மாகாணத்தில் அரசில் பணியாற்றுவதாக பட்டியலிடப்பட்டிருப்பவர்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவர்கள் உண்மையில் பணியில் இல்லை என்பதையும் அம்மாகாண முதல்வர் சுப்ரா மஹுமபெலோ உறுதி செய்துள்ளார்.

இல்லாத ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, சம்பளமும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக குற்றவிசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரியிருக்கின்றன. இந்த ஊழலை செய்தவர்கள் மீது தயவுதாட்சயம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சுப்ரா மஹுமபெலோ பொதுமக்களிடம் உறுதி கூறியுள்ளார்.

Leave a Reply