எப்போது முடிவுக்கு வரும்?

உலகளவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை நெருங்கியதால் உலகம் முழுவதிலும் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,97,666 ஆக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,26,597 ஆக உயர்ந்துள்ளதாகவும்,
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,78,503ஆக உயர்ந்துள்ளதாகவும், தகவல்கள் வெளிவ்நதுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் ‘கொரோனா’வுக்கு 26,047 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 2,407 பேர் பலியாகியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply