shadow

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களியுங்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு ராகுல்காந்தி உத்தரவு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ளார். அவர் அணியில் 124 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், அது உறுதி செய்யப்படாததால், இன்றைய வாக்கெடுப்பில் அவர் அரசு தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எட்டு எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் அரசு தப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசரும் அதிமுகவுக்கு ஆதரவாகவே பேசி வந்தது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்குமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. நேற்று நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கட்சி தலைமையிடத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், இதனையடுத்து ராகுல்காந்தி இந்த முடிவை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறாது. ஏற்கனவே திமுகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply