ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், நளினி உள்பட 7 பேர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசு அதிரடி முடிவெடுத்து இன்று காலை சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்தார். இந்த முடிவுக்கு தமிழகத்தின் பெரும்பாலான தலைவர்கள் வரவேற்பு கொடுத்துள்ள நிலையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முதல்வரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது உயிரிழந்த பல அப்பாவி மக்களை தமிழக அரசு எண்ணிப்பார்க்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

இதனிடையே முதல்வரின் முடிவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன், திருமாவளவன்தா. பாண்டியன், ஜி.ராமகிருஷ்ணன்,  நெடுமாறன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் இனிப்பான செய்தியை வழங்கியிருக்கிறார்.  இந்த விடுதலைக்கு காரணமான நீதியரசர் சதாசிவம், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply