shadow

6aதனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதாக பிரபல பத்திரிகை ஒன்றின் மீது காங்கிரஸ் தலைவர் குருதாஸ் காமத் ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மும்பையில் இருந்து வெளிவரும் விருத்மனாஸ் என்ற நாளிதழ், சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் மந்திரி குருதாஸ் காமத் குறித்து வெளியிட்டிருந்த ஒரு செய்தியில், தற்போது நடந்துகொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் குருதாஸ் படுதோல்வி அடைவார் என்றும், அவரது கூட்டத்திற்கு வந்த கூட்டம் பணம் கொடுத்த வரவழைக்கப்பட்ட கூட்டம் என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தி தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு ஆதாரமில்லாத அவதூறு செய்தியாக உள்ளது என குற்றம் சாட்டி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து குருதாஸ் வழக்கறிஞர் கூறியதாவது: “மும்பையில் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் அந்த நாளிதழ் அவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து அந்த நாளிதழுக்கு பதில் கேட்டு நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் மன்னிப்பு கேட்கவில்லை. எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அவர்களை தொடர்பு கொண்ட போது அந்த நாளிதழின் எக்சிகியூடிவ் எடிட்டர் ஞான்சியாம் கோசாவி அந்த செய்திகள் அனைத்தும் மக்களின் கருத்துக்கள் அடிப்படையிலானது என்றும் அதை வெளியிடுவதற்கு முன்பு குருதாசின் அனுமதி பெற போனில் முயற்சி செய்தும் பலனில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த வழக்கு மிகவிரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Leave a Reply