shadow

80% வருகைப்பதிவு கட்டாயம், 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு உபி யோகி ஆதித்யநாத் உத்தரவு

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் அவ்வப்போது அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உபி மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று காலை அதிரையாக  உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 80% வருகைப்பதிவு கட்டாயம் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யாநாத் பொறுப்பேற்றுக் கொண்டார். அதிலிருந்து அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் யோகி ஆதித்யாநாத்.

தற்போது, அரசு பள்ளிகளில் பயிலும் 9முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 80% வருகைப்பதிவு கட்டாயம் என அறிவித்துள்ளார். அதோடு கல்வி கட்டணத்தை அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் குறித்த தகவல் கேட்டு, அதை தடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அம்மாநில முதன்மை செயலாளர் ஜிதேந்திர குமார், மாணவர்களின் வருகைப்பதிவு 80% இருக்க வேண்டியது அவசியம் என உத்தரவிடப்பட்டுள்ளதோடு, ஆசிரியர்களின் வருகையை பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply