shadow

சீனா: தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்ற 100 டன் ரெயிலை தள்ளிய பயணிகள்

சீனாவில் ரயிலுக்கு அடியில் தவறி விழுந்த 72 வயது முதிய பெண் ஒருவரை காப்பாற்ற அந்த ரயில் நிலையத்தில் இருந்த அனைவருமே ஒன்று சேர்ந்து 100 டன் எடையுள்ள ரயிலை தள்ளிய நெகிழ்ச்சியான் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

சீனாவில் குவாங்ஷு மாகாணத்தில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் ரயில் ஒன்று நின்றது. அப்போது அந்த ரயிலில் இருந்து இறங்கிய 72 வயது பெண் தவறுதலாக பிளாட்பாரத்தில் கால் வைப்பதற்கு பதிலாக ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் உள்ள கால் வைத்ததால் இரண்டுக்கும் இடையில் சிக்கி கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ரயில் நிலையத்தில் இருந்த மற்ற பயணிகள் உடனடியாக ஒன்று சேர்ந்து அந்த பெண்ணை தூக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி ரெயில் பயணிகள் அனைவரும் பெட்டிகளில் இருந்து கீழே இறங்கி பெண் சிக்கியிருந்த ரெயில் பெட்டியை ஒன்று சேர்ந்து பக்கவாட்டில் கீழே தள்ளி சாய்த்தனர். 100 டன் எடை அந்த ரயில் ஒரு வழியாக சாய்ந்த பின்னர் சிக்கி கிடந்த பெண்ணை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

அது செல்போனில் வீடியோ ஆக எடுக்கப்பட்டு பின்னர் அது சமூக வலை தளங்களில் வைரல் ஆக பரவியது. அதை ஏராளமானவர்கள் பார்த்து ஆச்சரியப்பட்டனர். பெண் உயிருடன் மீட்கப்பட்டதை பாராட்டினர்.

Leave a Reply