தமிழகத்தில் வாக்காளர்களுக்கு முதல் முறையாக கலர் அடையாள அட்டை வழங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வழங்கி வரும் வாக்காளர் அடையாள அட்டையில் முகம் தெளிவாக இல்லை. இந்நிலையில் மாநில அளவில் வாக்காளர் அடையாள அட்டைகளை கலரில் தயாரித்து வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

எல்காட் மூலமாக அடையாள அட்டை தயாரிக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 20ம்  தேதி டெண்டர் விண்ணப்பங்கள் இறுதி செய்யப்படும் 10 நாளில், 25 முதல் 30 லட்சம் அடையாள அட்டைகள் தயாரித்து வழங்க  நிபந்தனை  விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்தில் 30 இடங்களிலும், கோவை மண்டலத்தில் 25 இடங்களிலும், திருச்சி, மதுரை, சேலம் மண்டலத்தில் தலா 20 இடங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்க ஏற்பாடு செய்யப்படும். புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் பிரிவிற்கு அனுப்பி ஜனவரி 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு புதிய வாக்காளர் அடையாள அட்டையும் வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply