shadow

mondragonபிரேசில் நாட்டில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் 85–வது நிமிடத்தில் கொலம்பிய கோல் கீப்பராக பாரிட் மோன்ட்டிராகன் என்பவர் களம் இறக்கப்பட்டார். இவர் கோல்கீப்பர் டேவிட் ஓஸ்பினாவுக்கு பதிலாக கடைசி ஐந்து நிமிடங்களுக்கு மட்டும் இறக்கப்பட்டார்.

84 ஆண்டு கால உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் மிக அதிக வயதில் போட்டியில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையை இதன்மூலம் பார்ட் பெற்றுள்ளார். இவருக்கு தற்போது வயது 43 ஆண்டு 3 நாட்கள் ஆகிறது.  1994–ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில்ல் கேமரூன் வீரர் ரோஜர் மில்லா தனது 42 வயது 39 நாட்களில் கலந்து கொண்டதே இதுவரையில் சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாரிட் ஏற்கனவே 1994–ம் ஆண்டு மற்றும் 1998–ம் ஆண்டுகளில் நடந்த இரண்டு உலக கோப்பை போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். 16 ஆண்டுகள் இடைவெளி விட்டு தற்போது 2014 உலக கோப்பையில் விளையாடியிருப்பதன் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக கோப்பையில் ஆடியவர் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply