அக்டோபர் 12ஆம் தேதி பெங்களூரில் மெட்ரோ ரெயிலில் கல்லூரி மாணவி ஒருவரை 4 பேர் பாலியல் தொந்தரவு செய்ய ஒருவரும் அவருக்கு உதவிபுரிய முன்வரவில்லை என்பதோடு தடுக்க வேண்டிய பாதுகாப்பு அதிகாரிகளும் வாய்மூடி மௌனியாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி ஃபுடேஜ் இப்போது வெளியாகியுள்ளது.

அன்றைய தினம் இரவு 8 மணியளவில் எம்.ஜி. ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் ஏறினார். இவர் பையப்பன்ஹல்லிக்குச் செல்லவேன்டும்.

இவர் ஏறியதுமே இவரை முறைத்துப் பார்த்த 4 நபர்கள் இவரைப்பற்றி ஆபாச வார்த்தைகளால் பாலியல் ரீதியான கிண்டலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை தவிர்க்க அந்த மாணவி இடத்தை மாற்றியுள்ளார் ஆனால் அப்போதும் விடாமல் துரத்தியுள்ளது நால்வர் படை.

மெட்ரோ பாதுகாப்பு அதிகாரிகள் முன் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்ள அவர்களோ இதைத் தடுக்காமல் அந்தப் பெண்ணிடம் இதனைப் பெரிது படுத்தவேண்டாம் என்று கூறியுள்ளனர்.

மெட்ரோ ரெயிலில் நிறைய பேர் பயணம் செய்தபோது இது நடந்தாலும் ஒருவரும் இதனை தடுக்க முன்வரவில்லை.

பையப்பன்ஹ்ல்லி பாதுகாப்பு அலுவலர்கள் இருவரிடமும் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.

பிறகு உல்சூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் 10 நாட்களாக பயனில்லை. இந்தச் செய்தி பெங்களூர் மிரரில் வெளியான பிறகே போலீஸ் இப்போது அந்த 4 பேருக்கும் வலை வீசியுள்ளது.

Leave a Reply