shadow

ஜல்லிக்கட்டு விழிப்புணர்வு எதிரொலி: 75% விற்பனையில் சரிவான வெளிநாட்டு குளிர்பானங்கள்

உலகையே திரும்பி பார்க்க வைத்த இளைஞர்களின் சென்னை மெரீனா ஜல்லிக்கட்டு போராட்டத்தின் விளைவால் வெளி நாட்டு குளிபானங்களின் விற்பனை 75 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

‘ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வெளிநாட்டு குளிபானங்களான பெப்சி, கோக் உள்பட பல்வேறு குளிர்பானங்களை குடிக்க மாட்டோம் என்று தமிழக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதி எடுத்ததன் விளைவாக தமிழகத்தில் அந்த குளிர்பானங்களின் விற்பனை பெருமளவு குறைந்துள்ளது. மேலும் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் அன்னிய குளிபானங்களை விற்கமாட்டோம் என்று வணிகர் சங்கம் எடுத்துள்ள முடிவால் இனிவரும் மாதங்களில் 90% வரை குறைய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் உள்நாட்டு குளிர்பானங்களான இளநீர், மோர், பதநீர் உள்ளிட்டவைகளை விற்பதற்கான பணியில் ஈடுப்பட்டு வருகவதாகவும், நமது பாரம்பரிய பானங்களான இவை விலை குறைவாக இருப்பதோடு உடலுக்கும் ஆரோக்கியம் தரும் என்றும் விக்கிரமராஜா தெரிவித்தார்.

இந்நிலையில் விலை வீழ்ச்சி காரணமாக இதுவரை ரூ.30க்கு விற்பனையாகி வந்த ஃபேண்டா உள்பட பல குளிர்பானங்களை தற்போது அந்நிறுவனங்கள் ரூ.10க்கு விற்க தயாராகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply