shadow

kovai youth arrestedஅமெரிக்காவில் இருந்து ஆன்லைனில் துப்பாக்கி வாங்கிய கோவை வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கும் தீவிரவாதிக்கும் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் கோவை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

அமெரிக்காவில் இருந்து ஒரு பார்சல் கோவையை சேர்ந்த 23வயது வாலிபர் சூரியதேவன் என்பவருக்கு தபால்மூலம் சென்னை வந்தது. சென்னையில் இருந்து கோவைக்கு பார்சல்களை அனுப்ப தபால் அதிகாரிகள் பார்சல்களை ஸ்கேன் செய்தபோது ஒரு பார்சலில் துப்பாக்கி போன்ற பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் தபால் அதிகாரிகள் காவல்துறையினர்களுக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் பார்சலை பிரித்து ஆய்வு செய்தபோது அது 9 எம்.எம். அளவு கொண்ட தோட்டாக்கள் பயன்படுத்தப்படும் கைத்துப்பாக்கி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சூரியதேவனை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் டிப்ளமோ படித்து முடித்து விட்டு தந்தையுடன் தங்கநகை செய்யும் தொழில் செய்து வருவதாகவும் ஆன்லைனில் ரூ.10 ஆயிரத்திற்கு அந்த துப்பாக்கியை கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆர்டர் செய்ததாகவும் தெரியவந்தது. இதையடுத்து இந்த துப்பாக்கி தபாலில் அனுப்பப்பட்டு உள்ளது.

கைது செய்யப்பட்ட சூர்யதேவனுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வரும் போலீஸார், அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். சூரியதேவனை காவலில் வைக்க நீதிபதி வித்யா உத்தரவிட்டதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்

Leave a Reply